2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் விடை பெற்றன கொரோனா காலக் கட்டுப்பாடுகள்
2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா காலக் கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன.
கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இனிமேலும் நாடு முழுக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழான நோய் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டாமென முடிவு எடுத்துள்ளதாக கடந்த 23 ஆம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
இதன்படி கடந்த மாதம் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இன்றுடன் முடிவடைந்த நிலையில், இதற்கு மேல் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இனிமேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உத்தரவுகளை மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டாமென கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் மற்றும் கை கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத்துறையின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments