பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை-இம்ரான்கான் திட்டவட்டம்
பாகிஸ்தானில் அந்நிய சக்திகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் இம்ரான் கான் அந்த அந்நிய சக்தி அமெரிக்காதான் என்று கூறி உடனடியாக தமது கருத்தை மாற்றிக் கொண்டார்.
தம்மை பதவியில் இருந்து நீக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நிய நாடு ஒன்று பாகிஸ்தான் அரசியலில் தலையிடுவதாகக் கூறிய இம்ரான் கான், நா தவறி அமெரிக்காவின் பெயரை உச்சரித்து பின்னர் ஒரு அந்நிய நாடு என்று திருத்திக் கொண்டார்.
ஏப்ரல் 3 ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஏற்கனவே பல்வேறு எம்பிக்கள் எதிர்க்கட்சியினருடன் கைகோர்த்து இருப்பதால் இம்ரான் கான் அரசு மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது.
தாம் கிரிக்கெட் விளையாடும் போது கடைசி பந்து வரை விளையாடியதைப் போல அரசியலிலும் ஆடுவதாக தெரிவித்த இம்ரான் கான், தாம் பதவியை விட்டு போனாலும் கூடுதலான பலத்துடன் திரும்பி வருவேன் என்று கூறியுள்ளார்.
Comments