இலங்கையில் 13 மணி நேரம் மின்வெட்டு.. பொதுமக்கள் கடும் அவதி..!
இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் 13 மணி நேரத்திற்கு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய இலங்கை அரசால் பணம் கொடுக்க முடியாததாலும், போதுமான அந்நிய செலாவணி இல்லாததாலும் அந்நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மின் தடை காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லால்லாமல் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் கெட்டுப்போவதாக கடைக்காரர்களும், எந்திரங்கள் இயங்காததால் தொழில் பாதிக்கப்படுவதாக பல்வேறு நிறுவனங்களின் தொழிலாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எரிபொருளை சேமிக்கும் வகையில் 10 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் தெரு விளக்குகளையும் அணைத்திருப்பதாக இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Comments