அரசு பள்ளியில் அதிகளவில் பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரை குடித்த 17 மாணவர்களுக்கு ஒவ்வாமை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பள்ளியில் அதிகளவில் பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரை குடித்த 17 குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மூங்கிலேரிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு தொடக்கப் பள்ளியில் 68 மாணவர்கள் படித்து வரும் நிலையில், மதிய உணவு இடைவெளிக்கு முன் பள்ளியில் இருந்த குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை குழந்தைகள் அருந்தியதாக கூறப்படுகிறது. அதன்பின், அடுத்தடுத்து 17 குழந்தைகளுக்கு மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால், 17 பேரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரிசோதனையில் குழந்தைகள் குடித்த தண்ணீரில் அதிகளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து இருந்ததால் ஒவ்வாமை ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் குழந்தைகளிடம் நேரில் விசாரணை நடத்திய ஊத்தங்கரை தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர், தண்ணீரில் பிளீச்சிங் பவுடர் கலந்தது தொடர்பாக ஊராட்சி ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Comments