2 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 50 பவுன் நகை, ரூ.3.50 லட்சம் ரொக்கம் கொள்ளை -மர்மநபர்களுக்கு வலை

0 1905

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், 2 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி நகை பணத்தை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமழைமணக்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து, உள்ளே நுழைந்த 5க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், வீட்டில் இருந்த 2 மாத பச்சிளம் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பீரோ சாவி உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டு வீட்டில் இருந்த 50 பவுன் நகை, 3 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகை எஸ்.பி. ஜவகார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments