ரஷ்யா மீதான இந்தியாவின் நிலைப்பாடு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது - அமெரிக்கா
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவின் டெல்லி வருகை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க வணிகத்துறை அமைச்சர் கினா ரைமண்டோ, வரலாற்றில் சரியான பக்கம் நிற்க வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் உக்ரைன் மக்களின் சுதந்திரம், ஜனநாயகம், இறையாண்மை ஆகியவற்றின் பக்கம் நிற்பதாகத் தெரிவித்தார்.
Comments