வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து.. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு - அமைச்சர் துரைமுருகன்
வன்னியர்களுக்கான பத்தரை சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடுகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்கள் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களும் அதனை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், தேர்தல் நேரத்தில் அவசர கதியில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் அடிப்படை தரவுகள் இன்றி இயற்றப்பட்டிருப்பதாக கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
Comments