தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகிற 2-ந் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லையில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,4 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்றதோடு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments