சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவம்.. விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நிறைவு
சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் குன்மிங்கில் இருந்து குவாங்சூ நோக்கிச் சென்ற ஈஸ்டர்ன் ஏர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 - 800 ரக விமானம், குவாங்சி மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணித்த 132 பேருமே உயிரிழந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தன. விமானத்தில் இருந்த 2 கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டன.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் பணி நிறைவடைந்ததாக அறிவித்துள்ள சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் பாதுகாப்புத் தலைவர், 30 நாட்களுக்குள் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Comments