2021-22 நிதியாண்டில் ரூ.83.45 லட்சம் கோடி மதிப்பிலான யூபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை - என்பிசிஐ
இந்தியாவில் 2021-22 நிதியாண்டில் 83.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான யூபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் முறை பரிவர்த்தனை படிப்படியாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், முதன் முறையாக மார்ச் மாதத்தில் யூபிஐ மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 500 கோடியை கடந்துள்ளதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது.
2021-22 நிதியாண்டில் இந்தியாவின் 60 சதவீத சில்லறை வணிக கட்டணங்கள் யூபிஐ டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் என்பிசிஐ தெரிவித்துள்ளது.
Comments