குண்டுமழை பொழியும் ரஷ்யா.. உக்ரைன் குற்றச்சாட்டு.!

0 2014

உக்ரைனில் படைகளைப் பின்வாங்கிக் கொள்வதாக ரஷ்யா அறிவித்த பகுதிகளிலும், மற்ற பகுதிகளிலும் ரஷ்ய ராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்து வருவதாகவும், தாக்குதலை அதிகரித்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் ஒரு மாதக் காலத்துக்கு மேல் நீடிக்கிறது. இரு நாட்டுக் குழுவினரின் பேச்சுவார்த்தைக்குப் பின் நல்லெண்ண நடவடிக்கையாகக் கீவ், செர்னிகிவ் ஆகிய நகரங்களில் இருந்து ரஷ்ய ராணுவத்தினரைப் பின்வாங்கிக் கொள்வதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

அது ரஷ்யாவுடனான போரில் திருப்புமுனை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் தெரிவித்திருந்தார்.

இருநாடுகளின் குழுவினரும் வெள்ளியன்று காணொலியில் பேச்சு நடத்த உள்ளதாக உக்ரைன் குழுவின் தலைவர் டேவிட் அரக்காமியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷ்யா அறிவித்ததற்கு மாறாகக் கீவ், செர்னிகிவ் நகரங்களில் வீடுகள், கடைகள், நூலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் போர் விமானங்கள் மூலம் குண்டுமாரி பொழிந்து வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments