மக்களவையில் நிறைவேறியது டெல்லியின் மூன்று மாநகராட்சிகளையும் ஒருங்கிணைக்கும் மசோதா
டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒருங்கிணைக்கும் மசோதா மக்களவையில் குரல் வாக்கு மூலம் நிறைவேறியது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய ஷீலா தீக்சித் தலைமையிலான அரசால் டெல்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் அவற்றை மீண்டும் ஒருங்கிணைக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது .
எதிர்க்கட்சியினர் வலியுறுத்திய திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் டெல்லியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
Comments