பான் - ஆதார் இணைப்பு கால அவகாசம் இன்றுடன் நிறைவு

0 2575

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த ஆண்டு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

கொரோனா பரவல் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

அதேநேரம் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தவறியர்கள் 2023 ஆம் ஆண்டு மார்ச் வரை வருமான வரி தொடர்பான ஆவண சமர்பிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அதுவரை பான் எண் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments