உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் உதவி - அமெரிக்கா அறிவிப்பு
போரில் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள உக்ரைன் இராணுவத்திற்கு தேவையான கூடுதல் உதவிகளுடன் முழு ஆதரவை அமெரிக்கா அளிக்கும் என்று அதிபர் பைடன் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய ஜோ பைடன், ரஷ்ய படைகளின் கொடூர தாக்குதலினால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் நிதியுதவியாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த உரையாடலில் உக்ரைனுக்கான பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் ரஷ்யா மீது தொடரப்படும் பொருளாதாரத் தடைகள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments