இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு.!

0 2163

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளைநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என்றும் மே 7ஆம் தேதியுடன் முன்பதிவு காலம் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தம் மேற்கொள்ள 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையை தேசிய தேர்வாணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments