ஆந்திரா மாநிலம் குண்டூரில் 2 மாத பெண் குழந்தை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை... தந்தை உட்பட 11 பேர் கைது

0 1928

ஆந்திர மாநிலம் குண்டூரில் 2 மாத குழந்தையை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தந்தை உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மங்களகிரியை சேர்ந்த ராஜேஷ்-ராணி தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் 2 மாதத்திற்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், விரக்தியடைந்த குழந்தையின் தந்தை இடைத்தரகர்கள் மூலம் குழந்தையை விற்க முடிவு செய்து, சீரளா நகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது மனைவியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித்ததில், இடைத்தரகர்களிடம் குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஹைதராபாத் சென்ற போலீசார் இடைத்தரகர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments