லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது.!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஒருவருட லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு பொது மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
கைகாட்டிப்புதூரில் இயங்கி வரும் கே.எஸ்.கிளினிக்கில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவன் அங்கு வரும் நோயாளிகளுக்கு பொதுமருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வந்த புகாரையடுத்து, அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், அந்நபர் போலி மருத்துவர் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அவரை கைது செய்து அனுமதியின்றி இயக்கி வந்த மருத்துவ ஆய்வகக்கூடம் மற்றும் கிளினிக்கை மூடி சீல் வைத்தனர்.
Comments