உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர்களுக்கு பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டது வாபஸ்.!

0 1537

உத்தரப்பிரதேசத்தில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு பெண் உதவியாளர்களை நியமிக்க முடிவு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அந்த முடிவை திரும்பப் பெற்றார்.

பெண் ஊழியர்களுடன் பணிபுரிவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் தங்களுக்கு ஆண் உதவியாளர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்றும் சில மூத்த அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதே போல் பயணம், நீண்ட நேர பணி, அமைச்சர்களுடன் வெளியுர் பயணம் செல்வது போன்ற பிரச்சினைகளை சுட்டிக் காட்டி பெண் ஊழியர்கள் சிலரும் அமைச்சர்களுக்கு உதவியாளர்களாக இருப்பதற்கு தயக்கம் காட்டினர்.

இதையடுத்து அமைச்சர்களுக்கு ஆண் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments