அம்பேத்கர் படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2774
அம்பேத்கர் படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க, பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பேத்கர் படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க, பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த கெளரிசங்கர் என்பவர் தனது அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாகவும், பணி நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்று வந்ததோடு, சங்கத்தினருடன் வந்து அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறி கடந்த  2006ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மீண்டும் பணி வழங்க மத்திய தொழிலாளர்கள் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பணி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

கெளரிசங்கர் சார்பில்  தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வைக்கலாம் என்ற மத்திய நிதித்துறையின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி மீண்டும் கௌரிசங்கருக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments