ராணுவத்துக்கு 15 இலகுவகைப் போர் ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல்

0 2049

மூவாயிரத்து 887 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 இலகு வகைப் போர் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்குப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 377 கோடி ரூபாய் ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கப்படும் இந்த ஹெலிகாப்டரில் 45 விழுக்காடு அளவு உள்நாட்டு உதிரிப் பாகங்கள் இடம்பெறுகின்றன. அதை 55 விழுக்காடாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments