புதுச்சேரி சட்டசபையில் 2022- 2023 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி சட்டசபையில் 2022- 2023 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரியின் 15வது சட்டசபை கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு காலையில் தொடங்கிய நிலையில், சபாநாயகர் செல்வம் திருக்குறளை வாசித்து கூட்டத்தை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கு 3 ஆயிரத்து 613 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சிவா மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாதது குறித்து அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாததைக் கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Comments