வரும் 1ம் தேதி துர்க்மேனிஸ்தான் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

0 1218

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வரும் 1ம் தேதி துர்க்மேனிஸ்தானுக்கு செல்லவிருக்கிறார்.

துர்க்மேனிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக சர்தார் பெர்டிமுக்மிடோவ் பொறுப்பேற்றுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரை சந்தித்து பேச உள்ளார். இந்திய ஜனாதிபதி ஒருவர் துர்க்மேனிஸ்தான் நாட்டுக்கு செல்வது இதுவே முதன்முறையாகும்.

வரும் 4ம் தேதி துர்க்மேனிஸ்தான் பயணத்தை நிறைவு செய்யும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து நெதர்லாந்து செல்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments