எனக்கு வேறு வழி தெரியல அம்மா.. "நான் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறான்"-கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவி தற்கொலை

0 4600

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே “தாம் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு ஒருவர் மிரட்டுவதாக” கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி அரசு கல்லூரி ஒன்றில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். வண்டியாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வந்த மாணவி, அங்கிருந்து ஊர் திரும்பி பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில் காலை மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதத்தில், “தாம் குளிப்பதை ஒருவன் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுக்கிறான்”  என்றும் “அவனிடமிருந்து தப்பிக்க தனக்கு வேறு வழி தெரியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் யார் என்பதை மாணவி குறிப்பிடாத நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments