ரஷ்ய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேரில் சந்திப்பு

0 1464
ரஷ்ய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேரில் சந்திப்பு

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ்-ம் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ-யும் சந்தித்து பேசினர்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததற்கு பிறகு தற்போது தான் முதல் முறையாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரும், சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். 

அன்ஹுய் மாகாணத்தில் ஆஃப்கானிஸ்தான் தொடர்பாக பேச சீனா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ரஷ்யாவும், சீனாவும்  தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கம் செய்ய ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments