விதிகளை மீறி கேரளாவுக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு சென்ற 4 லாரிகள் பறிமுதல்.!
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தில் விதிகளை மீறி கேரளாவுக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு சென்ற 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு ஜல்லி, பாறைப்பொடி, எம்சாண்ட், கற்கள் உள்ளிட்ட கனிமவளங்கள் 20 டன் வரையிலான பாரத்துடன் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்நிலையில், தெற்கு வள்ளியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விதிகளை மீறி அதிகளவு பாரத்தை ஏற்றிக் கொண்டு சென்ற கேரள, கர்நாடகா பதிவு எண்கள் கொண்ட 4 லாரிகளை பறிமுதல் செய்து ஓட்டுனர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments