"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொங்கண் ரயில்வேக்குட்பட்ட 741 கிலோமீட்டர் ரயில்பாதைகள் முழுவதும் மின்மயமாக்கப்பட்டதற்குப் பிரதமர் மோடி பாராட்டு.!
கொங்கண் ரயில்வேக்குட்பட்ட 741 கிலோமீட்டர் ரயில்பாதைகள் முழுவதும் மின்மயமாக்கப்பட்டதற்குப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட கொங்கண் ரயில்வே நிறுவனம் மகாராஷ்டிரத்தின் ரோகா முதல் கர்நாடகத்தின் தொக்கூர் வரை 741 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில்பாதையைக் கொண்டுள்ளது.
இந்த மொத்தப் பாதையையும் மின்மயமாக்கிவிட்டதாகவும், இதனால் எரிபொருள் செலவில் 150 கோடி ரூபாய் குறையும் என்றும், காற்று மாசுபாடு குறையும் என்றும் செவ்வாயன்று அறிவித்துள்ளது.
இதற்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நீடித்த வளர்ச்சிக்கான புதிய வரையறையை அமைத்ததற்காகப் பாராட்டியுள்ளார்.
Comments