கீவ் நகரைவிட்டு ரஷ்யப் படைகள் பின்வாங்கவில்லை என்றும், இடம் மாறியுள்ளது என்றும் அமெரிக்கா கருத்து.!
உக்ரைனின் கீவ் நகரைவிட்டு ரஷ்யப் படைகள் பின்வாங்கவில்லை என்றும், இடம் மாறியுள்ளது என்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான பேச்சுக்களை அடுத்து நல்லெண்ண நடவடிக்கையாகக் கீவ், செர்னிக்கிவ் நகரங்களை முற்றுகையிட்ட படைகளைத் திரும்பப் பெறுவதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது குறைந்த எண்ணிக்கையிலான படையினரை ரஷ்யா திரும்பப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இது கூட உண்மையான படைவிலக்கம் இல்லை என்றும், உக்ரைனின் வேறு பகுதிகளைத் தாக்குவதற்கான இடமாற்றம் என்றே இதைக் கருத வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments