உசிலம்பட்டி சந்தையில் வரத்து அதிகரிப்பால் 1 கிலோ தக்காளி 1 ரூபாய்க்கு கொள்முதல்

0 2004
உசிலம்பட்டி சந்தையில் வரத்து அதிகரிப்பால் 1 கிலோ தக்காளி 1 ரூபாய்க்கு கொள்முதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்திருப்பதால், ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தக்காளியை விவசாயிகள் உசிலம்பட்டி காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்த நிலையில், வரத்து அதிகரித்திருப்பதால் 13 கிலோ அடங்கிய தக்காளி பெட்டி 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் தொழிலாளிகளுக்கு கூலி, வண்டி வாடகை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் தக்காளி, காய்கறி சந்தை மற்றும் கடைகளில் 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments