பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கான் அரசு

0 4114

பாகிஸ்தானில் கூட்டணி கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டதால், இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் ஆகியவை காரணமாக இம்ரான்கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வருகிற 3-ந் தேதி நடைபெறும் நிலையில், வாக்கெடுப்புக்கு முன்பாகவே இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திடீர் திருப்பமாக இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் MQM கட்சி அறிவித்துள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்கள் தேவை என்ற நிலையில் இம்ரான்கான் தலைமையிலான ஆளுங்கட்சியின் பலம் 164 ஆக குறைந்துள்ளது.

MQM கட்சி அறிவிப்பால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மையை இழந்துள்ளதால், விரைவில் இம்ரான்கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments