கிவ் நகரின் மீது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் - அமெரிக்கா
கிவ் நகரின் மீது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, திடீரென படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்திருப்பதை விமர்சித்தார்.
சிறிய அளவிலான படைகள் கிவ் நகரை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியானது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இது படைகளை இடம் மாற்றும் உத்தி தான் என்றும் அவர் கூறினார்.
உக்ரைனின் இதரப் பகுதிகளில் கடுமையான மோதல்களை இனி உலகம் காணப் போகிறது என்றும் ஜான் கிர்பி எச்சரிக்கை விடுத்தார்
Comments