நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு.!

0 1987

அடுத்த வாரம் பிரஸ்செல்ஸில் நடைபெற உள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 6, 7-ஆம் தேதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg, தலைமையில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா, பின்லாந்து, ஜார்ஜியா, ஜப்பான், நியூசிலாந்து, சுவீடன், கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து 30 நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் கூட்டம் கூட்டப்படுவது இது 2-ஆவது முறையாகும்.

சில அமைச்சர்கள் வீடியோ இணைப்பு மூலம் கலந்து கொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments