பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கான நடைமுறை மாற்றம்
ஆர்க்கிடெக்சர் எனப்படும் கட்டடக் கலை தொடர்பான படிப்புக்கு 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படிப்பது கட்டாயமில்லை என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் கூறியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பேஷன் டெக்னாலஜி மற்றும் பேக்கேஜிங் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கும் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பாடத் திட்டத்திலும் இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Comments