இம்ரான் கான் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தப்புமா? கட்சியின் எம்பிக்களுக்கு இம்ரான் கான் கடிதம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கெடுப்பில் தமது கட்சி எம்.பிக்கள் பங்கு கொள்ள வேண்டாம் என்று இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவருடைய கட்சி எம்பிக்களுக்கு கடிதம் மூலம் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில் இம்ரான் கானுக்கு 172 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணிக் கட்சியினரும் சொந்த கட்சியினர் சுமார் 20 பேரும் வாக்களிக்கக் கூடும் என்று கருதப்படுவதால் இம்ரான் கான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
Comments