ஓலா, ஒக்கிநாவா நிறுவனங்களின் மின் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக விசாரணை நடத்த சாலைபோக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவு.!

0 2644

ஓலா, ஒக்கிநாவா நிறுவனங்களின் மின் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அண்மை காலமாக தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரு நிறுவனங்களின் மின் ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளாகின.

இந்நிலையில், அந்த நிறுவனங்களின் மின் ஸ்கூட்டர்கள் தீவிபத்திற்குள்ளாவது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள டி.ஆர்.டி.ஓ.வின் பாதுகாப்பு மையமான தீ, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக சாலைப்போக்குவரத்து அமைச்சக செயலாளர் அர்மானே கிரிதர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments