கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் பாதுகாப்பின்றி நுழைந்த ரஷ்ய வீரர்கள்.. ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
உக்ரைன் நாட்டில், கதிர்வீச்சு பாதிப்பு அதிகம் உள்ள செர்னோபிலின் சிவப்பு காடுகளுக்குள் ரஷ்ய ராணுவத்தினர் எவ்வித கவச உடையும் அணியாமல் செல்வதால் அவர்கள் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
35 ஆண்டுகளுக்கு முன் செர்னோபில் அனு உலையில் ஏற்பட்ட விபத்தால், அது மனிதர்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாறியது. கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பைன் மரங்கள் சிவப்பாக மாறியதால் அவை சிவப்பு காடுகள் என அழைக்கப்பட்டன.
செர்னோபிலை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள், கதிர்வீச்சு தாக்கிய நிலத்தில் கனரக ராணுவ வாகனங்களை இயக்குவதால் அப்பகுதியில் கதிர்வீச்சின் அளவு 7 மடங்கு அதிகரித்தது. அப்போது கிளம்பும் புழுதி காற்றை அவர்கள் சுவாசிப்பதால் உள் உறுப்புகள் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.
சிவப்பு காடுகளுக்குள் கவச உடை அணிந்தவர்களே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய வீரர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி நடமாடுவது தற்கொலைக்கு சமம் என அங்குள்ள பணியாளர்கள் விமர்சிக்கின்றனர்.
Comments