ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.1,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தலைவரான பவான் முன்ஜால் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
மார்ச் 23 முதல் 26ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள பவான் முன்ஜாலுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடந்த விசாரணையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் போலி ஆவனங்கள் மூலம் கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுக்கிறது.
மேலும், டெல்லி புறநகர்ப் பகுதியில் 100 கோடி ரூபாய் கருப்பு பணத்தின் மூலம் பண்ணைத் தோட்டம் வாங்கியதும் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments