மானிய உரங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் - தமிழக அரசு

0 1285

மானிய உரங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சில்லரை உர விற்பனையாளர்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சில உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக உரங்களுடன் சேர்த்து இதர இடுபொருட்களையும் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

விதிமீறல்கள் செய்யும் உர விற்பனையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ள தமிழக அரசு, அதுபோன்ற விற்பனையாளர்கள் குறித்த புகார்களை 9363440360 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments