ராஜபாளையத்தில் நீர்நிலை பகுதியில் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட 13 ஏக்கர் நிலம் மீட்பு.!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நீர்நிலை பகுதியில் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட 13 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குள்ளான நிலங்களை கணக்கெடுத்து மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் ராஜபாளையத்தில் உள்ள கடம்பன்குளம் கண்மாயை கடந்த சில தினங்களுக்கு முன் வருவாய்த் துறையினர் அளவீடு செய்தனர்.
அதில், கண்மாய் பகுதியை சுற்றி இருந்த சுமார் 13 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை மீட்டனர்.
Comments