கடல்சார் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்..
கடல்சார் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிம்ஸ்டெக் நாடுகளின் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
வங்கக் கடலோர நாடுகளின் கூட்டமைப்பான பிஸ்டெக்கின் 18ஆவது மாநாடு இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிம்ஸ்டெக் நாடுகள் கூட்டாக இணைந்து பயங்கரவாதம், வன்முறையை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.
தற்போதைய சூழலில் போதைப் பொருள் கடத்தல், இணையவழி தாக்குதல் ஆகியவை அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், வணிகம், துறைமுக வசதிகள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு அவசியமானது என கூட்டத்தில் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
Comments