ஜூலை 24ஆம் தேதி குரூப்-4 தேர்வு - TNPSC

0 4991
குரூப்-4 தேர்வுகள் ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அத்தேர்விற்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

குரூப்-4 தேர்வுகள் ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அத்தேர்விற்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், மொத்தம் 7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

மூன்று மணி நேரம் நடைபெறும் தேர்வில் மொத்தம் முந்நூறு மதிப்பெண்களுக்கு இருநூறு கேள்விகள் கேட்கப்படும் என்றும் தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக குரூப்-4 தேர்வுகள் நடைபெறாத நிலையில், அதனால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

ஜூன் 19ல் நடைபெறும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு பரிட்சார்த்த முறையில் ஓ.எம்.ஆர். விடைத்தாளுக்கு பதில், கணினி வழியில் நடத்தப்படும் என பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments