அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
சென்னை ஆழ்வார்திருநகரில் பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தை அடுத்து, சென்னையிலுள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த சுற்றறிக்கையில், பள்ளி பேருந்து வாகனங்களை முறையாக பராமரித்து, ஆண்டுதோறும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தி புதுப்பிக்க வேண்டும்.
உரிய கல்வித் தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்ற ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களேயே நியமிக்க வேண்டும். ஓட்டுநரின் குழந்தை அல்லது குடும்பத்தினரின் புகைப்படத்தை அவரது இருக்கைக்கு எதிரே பார்வையிடும் படும்படி ஒட்ட வேண்டும். மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிவிட உதவியாளரை கட்டாயம் நியமித்து கண்காணிக்க வேண்டும்.
பள்ளி வாகனத்தில் திரைப்பட பாடல்களை ஒலிக்கக் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் மிகையான அளவு மாணவர்களை ஏற்றக் கூடாது. மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments