ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் - ஆஸ்கர் நிர்வாகம்

0 1301
ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் - ஆஸ்கர் நிர்வாகம்

ஆஸ்கர் விருது மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்ததற்காக அவரிடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ள நிலையில்,இந்த  விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஆஸ்கர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொகுப்பாளரை அறைந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்கர் நிர்வாகம்,  தவறாக நடந்துக்கொள்ளும் கலைஞர்கள் மீது ஆஸ்கர் விருதை திரும்ப பெறுதல், எதிர்காலத்தில் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற தடை விதித்தல் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே அமெரிக்க டென்னிஸ் நட்சத்திர சகோதரிகள் வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ்-ன் தந்தை ரிச்சார்ட் வில்லியமின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments