சூப்பர் மார்கெட் மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்.. விமானத்தில் பயணம் செய்த 4 பேரில் 3 பேர் பலி

0 6641
சூப்பர் மார்கெட் மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்.. விமானத்தில் பயணம் செய்த 4 பேரில் 3 பேர் பலி

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் ஒன்று சூப்பர் மார்கெட் ஒன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 5 பேர் படுகாயமடைந்தனர்.

மெக்சிகோவின் அகாபுல்கோ நகரில் இருந்து விமான ஓட்டி உட்பட 4 பேருடன் புறப்பட்ட அந்த விமானம், பியூப்லா நகரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது மத்திய மெக்சிகோவின் டெமிக்ஸ்கோ பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் சூப்பர்மார்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். விமானத்தில் இருந்த 4 பேரில் 3 பேர் பலியான நிலையில், படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments