இந்திய கடலோர காவல் படைக்கு 8 புதிய கண்காணிப்பு படகுகள்.. ரூ.473 கோடிக்கு கோவா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இந்திய கடலோர காவல்படைக்கு புதியதாக 8 ரோந்து படகுகள் கட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 473 கோடி ரூபாய்க்கு கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு கோவா கப்பல் கட்டும் தளத்தில் இந்த படகுகள் தயாரிக்கப்பட உள்ளன. 8 படகுகளும் கடற்கரையோரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட உள்ளன.
தற்சார்பு பாரதத்தை முதன்மையாக கொண்டு, உள்நாட்டிலேயே கப்பல் கட்டுவதை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பை அதிகரித்தல் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments