ரஷ்ய செல்வந்தர் மீது சந்தேகத்திற்குரிய விஷத் தாக்குதல்.. மோசமான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்

0 1772
ரஷ்ய செல்வந்தர் மீது சந்தேகத்திற்குரிய விஷத் தாக்குதல்.. மோசமான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்

உக்ரைன் அமைதிக் குழுவின் பிரதிநிதியும் ரஷ்ய செல்வந்தருமான ரோமன் அப்ராமோவிச்சுக்கு விஷம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அடுத்து பல்வேறு நாடுகள் விதித்த பொருளாதார தடைகளில் ரஷ்ய பெரு முதலீட்டாலர் ரோமன் அப்ராமோவிச்சின் சொத்துக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதேநேரம் உக்ரைன் கேட்டுக் கொண்டதன் பேரின் ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பு பிரிதிநிதியாக ரோமன் பங்கேற்றார்.

இந்நிலையில் ரோமன் அப்ராமோவிச் உள்பட 3 பிரதிநிதிகளும் மர்ம விஷத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கண்கள் சிவந்து, வலியுடன் கூடிய கண்ணீர், கை மற்றும் முகத்தில் தோல் உறிந்து உள்ளிட்ட அறிகுறிகள் அவர்களது உடலில் காணப்பட்டதாகவும் வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது மூவரும் நல்ல உடல் நிலையில் இருப்பதாக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments