ஆக்ராவில் ரயில் சக்கரங்களில் சிக்கி காவலர் உயிரிழந்த பதைபதைக்கும் வீடியோ வெளியீடு

0 4243
ஆக்ராவில் ரயில் சக்கரங்களில் சிக்கி காவலர் உயிரிழந்த பதைபதைக்கும் வீடியோ வெளியீடு

ஆக்ராவில் ரயில் நிலைய நடைபாதையில் நின்ற காவலர் திடீரென நிலை குலைந்து தண்டவாளத்தில் விழுந்து சரக்கு ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த பதைபதைக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராஜ மண்டி ரயில் நிலையத்தை சரக்கு ரயில் கடந்து கொண்டிருந்த நிலையில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த ரயில்வே காவலர் ரிங்கால் சிங், திடீரென தண்டவாளத்தில் விழுந்தார்.

சரக்கு ரயில் சக்கரங்களில் சிக்கி ரிங்கால் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியிடப்பட்ட நிலையில் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments