சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு.
சர்வதேச சந்தையில் ஏறத்தாழ மூன்று வாரங்களுக்கு பிறகு கச்சா எண்ணெய் பீப்பாய் 100 டாலருக்கும் கீழ் விலை குறைந்து வர்த்தகமானது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள், அதனால் தடைபட்ட எண்ணெய் விநியோகம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அமலான ஊரடங்கால் எரிபொருக்கான தேவை குறையலாம் என்ற சூழல் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரன்ட் வகை கச்சா எண்ணெய் பேரலுக்கு 99 டாலர் 91 சென்ட்களில் வர்த்தகமானது.
Comments