நடிகர் ரண்வீர் சிங்குடன் அமைச்சர் அனுராக் தாக்கூர் நடனம்!

0 1825

துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நடிகர் ரண்வீர் சிங்குடன் நடனமாடினார். துபாயில் நடைபெறும் தொழில் கண்காட்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார்.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருடன் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங்கும் கலந்து கொண்டார். அப்போது, பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்தில் இருந்து மல்ஹாரி என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அப்போது நடனமாடிய ரண்வீர் சிங்கின் வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் நடனமாடினார்.

கண்காட்சியில் இடம்பெற்ற இந்தியாவின் அரங்கை இதுவரை 17 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக அமைச்சர் அனுராக்தாகூர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments