பார்ம்.டி படித்து வந்த கல்லூரி மாணவி பாடங்கள் மிகவும் கஷ்டமாக உள்ளதால் தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தூக்கிட்டு தற்கொலை

0 3114

சென்னையில் தங்கி பார்ம்.டி படித்து வந்த மாணவி பாடங்கள் மிகவும் கஷ்டமாக உள்ளதால் தற்கொலை செய்யப்போவதாகத் தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பார்ம்-டி படித்து வந்தார். 4ம் ஆண்டு மாணவியான பவித்ரா, தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

படிக்கப் போவதாக கூறிவிட்டு படுக்கை அறைக்கு சென்ற பவித்ரா, வெகு நேரமாகியும் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த தோழிகள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது பவித்ரா துப்பட்டவால் தூக்கிட்டு கொண்டது தெரிய வந்தது.

அரியர்கள் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா தன்னால் குடும்பத்துக்கு எவ்வித பயனும் இல்லை எனத் தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த வாரம் இதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments