ஆட்டோவில் இருந்து இறங்கி 4 வயது மகனின் கையை பிடிக்க தவறிய தாய்… தனியாக சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது சரக்கு வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழப்பு

0 4784

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி பணம் கொடுக்கும் நேரத்தில் 4 வயது மகனின் கையை பிடிக்க தாய் தவறிய நிலையில், தனியாக சாலையை கடக்க முயன்ற சிறுவன் சரக்கு வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தான்.

கட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, தனது 4 வயது மகன் நிஷ்வந்த் உடன் ஆலம்பட்டியில் உள்ள வங்கிக்கு ஆட்டோவில் சென்று இறங்கியுள்ளார். அப்போது, அவ்வழியாக சங்கரன்கோவிலிருந்து மதுரை நோக்கி வந்த கொரியர் வேன் சிறுவன் மீது மோதிய விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் நிஷ்வந்த் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இதனிடையே, விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக உள்ள ஓட்டுநர் மணிக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments